துணை முதல்வர் ஓபிஎஸ்-க்கு வந்த சம்மன்: அதிமுகவில் பரபரப்பு

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2019 (22:49 IST)
ஜெயலலிதா மரணம் குறித்த மர்மங்களை விசாரணை செய்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் கடந்த சில மாதங்களாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. மாநில அமைச்சர்கள், ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள், அப்பல்லோ மருத்துவர்கள் உள்பட பலரிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது
 
இந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன் ஓபிஎஸ் விரைவில் ஆஜராவார் எறு கூறப்பட்ட நிலையில் அவர் வரும் 19-ம் தேதி காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஜெயலலிதா மறைவின்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் எதிரும் புதிருமாக இருந்தனர். ஆனால் தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்-ம், துணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ்-ம் உள்ளதால் ஆறுமுகசாமி ஆணையம் முன் ஆஜராகி ஓபிஎஸ் எந்தவிதமான வாக்குமூலத்தை கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
 
ஓபிஎஸ் அவர்களிடம் நடத்தும் விசாரணையுடன் இந்த ஆணையத்தின் விசாரணை முடிவடைய உள்ளதாகவும், அதனையடுத்து விரைவில் தமிழக அரசுக்கு ஆணையம் அறிக்கை தாக்கல் செய்யும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

விஜய்க்கு சிபிஐ சம்மன்!.. போனாலும் பிரச்சனை... போகலானாலும் பிரச்சனை.. தளபதி சமாளிப்பாரா?!...

திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ஊழல்.. ஆளுநர் ரவியிடம் எடப்பாடி பழனிச்சாமி புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments