Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் என்ன தெரியுமா?

பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் என்ன தெரியுமா?
எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன்னால் உ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் என்னவென்று தெரிந்து  கொள்ளுங்கள். 
ஓம் என்ற மந்திரத்திற்கு பிறகே கணேசாய நமஹ, நாராயணாய நமஹ, சிவாயநம என்று மந்திரங்களைச் சொல்கிறோம். இதில் ஓம் என்பதை அ, உ, ம் என்று பிரிக்க வேண்டும். அதாவது அ, உ, ம் என்ற எழுத்துகளை இணைத்தால் ஓம் என்று வரும். அ என்பது படைப்பதையும், உ  என்பது காப்பதையும், ம் என்பது அழிப்பதையும் குறிக்கும். 
 
அ என்பது முதலெழுத்து. இது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கிறது. உ என்பது உயிரெழுத்துக்களின் வரிசையில் ஐந்தாவதாக வருகிறது. மெய்,  வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து உறுப்புகளை மனிதர்கள் அடக்கி வைத்துக் கொண்டால், ஆயுள் அதிகரிக்கும் என்பதும், ஆயுள் கூடக்கூட, மனிதர்கள் துவங்கியது தடையின்றி நடக்கும் என்பதும் தெரிந்த விஷயம். 
 
மேலும், உ என்பது காத்தல் எழுத்து என்பதால், இறைவன் நம்மை பாதுகாப்பதைக் குறிக்கிறது. நம் செயல்கள் தடையின்றி நடக்க வேண்டுமானால் நமக்கொரு பாதுகாப்பு வேண்டும். இதற்காகவே உ என எழுதுகிறோம்.
 
கயிலையிலும் தேவலோகத்திலும் அழகே உருவாக காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவரும் விதமாக நடமாடியதால் தேவர்களும் முனிவர்களும், யார் இந்த பிள்ளை? இந்த பிள்ளை யார்? என்று கேட்டுக்கொண்டனர். அதுவே நாளடைவில் பெயராக மலர்ந்தது. பிள்ளையார் மிகவும் எளிமையானவர். இவருக்கு கோபுரமோ கொடிமரமோ மாட மண்டபமோ மதிற்சுவரோ தேவையில்லை. நம் உள்ளத்தில் ஓர்  இடமளித்தால் போதும். மண்ணில் செய்து வைத்தாலும் வருவார். மஞ்சளில் செய்து வைத்தாலும் வருவார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுக்கிர வழிபாடு காதலர்களை ஒன்று சேர்க்குமா...?