Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஸ் ஸ்டாண்ட் இடமாற்றத்தால் பேருந்து கட்டணம் குறைப்பு - எங்கு தெரியுமா?

Webdunia
புதன், 29 மார்ச் 2023 (15:07 IST)
புதிய பேருந்து நிலையத்தை அடிப்படையாகக் கொண்டு, கோவை - மேட்டுப்பாளையம் இடையே இயங்கும் பேருந்துகளில் திருத்தி அமைக்கப்பட்ட கட்டணம் இன்று மார்ச் 29 முதல் அமலாகும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பல ஆண்டுகளாக மேட்டுப்பாளையம் உதகைக்கு அரசு தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதனால் நகருக்கு ஏற்படும் நெரிசல் குறைக்கும் நோக்கில் சாய்பாபா கோவில் அருகே புதிய பேருந்து நிலையம் கடந்த 2010 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகளை இயக்கினால் காந்திபுரம் செல்வதற்கு நகரப் பேருந்துகள் அல்லது வேறு வாகனங்களை பொதுமக்கள் நாட வேண்டிய கட்டாயம்  ஏற்படும். இது தங்களது வருவாய் பாதிக்கும் என்று கருதி தனியார் பேருந்து உரிமையாளர்கள் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு பேருந்துகளை இயக்கும் வகையில் உயர்நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றனர்.
 
இருப்பினும் சாய்பாபா கோவில் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்ற, இறக்கி செல்ல வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து சாய்பாபா கோவில் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்துகள் காந்திபுரம் இருந்து மேட்டுப்பாளையம் செல்வதற்கான கட்டணத்தையே  வசூலித்து வந்தனர். இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பயண தூரம் குறைவதால் புதிய ஸ்டேஜ் உருவாக்கி அதற்கு ஏற்ப கட்டணத்தை குறைக்க வேண்டும் என முன்னாள் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதன்படி வசூலித்து வந்தனர்.
 
இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அப்போது ஆட்சியர் ஜி எஸ் சமீரன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பேருந்து உரிமையாளர்கள் மாநில போக்குவரத்து மேல்முறையீடு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து திருத்தி அமைக்கப்பட்ட கட்டணத்தை தனியார் பேருந்து உரிமையாளர்கள் வசூலிக்கவில்லை. இந்நிலையில் கோவை மேட்டுப்பாளையம் வழித் தடத்தில் இயங்கும் அனைத்து பேருந்து உரிமையாளர்கள் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் கோவை அரசு போக்குவரத்துக் கழக வேளாண் இயக்குனர் அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஆகியவற்றிற்கு கோவை வடக்கு போக்குவரத்து கழகத்திற்கு ஆட்சியர் உத்தரவிட்ட படி தங்கள் வழித் தடத்தில் புதிய ஸ்டேஜ் உருவாக்கி கடந்த 2018 ல் திருத்தி அமைக்கப்பட்ட கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இருப்பினும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 12 நாட்கள் ஆகியும் அமலாக்க வில்லை. 
 
இது தொடர்பாக கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சிவகுருநாதனிடம் கேட்டபோது , திருத்தி அமைக்கப்பட்ட  கட்டணத்தை மட்டுமே இனி மேல் வசூலிக்க வேண்டும். பேருந்து உரிமையாளர்கள் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு அறிவுறுத்து உள்ளோம். அதன்படி கட்டணத்தை குறைத்து இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படும் யாரேனும் கூடுதல் கட்டணம் வசூலித்தால் போக்குவரத்து துறையிடம் புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments