Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒருவர் ஜாதகத்தில் எந்தக் இடத்தில் உள்ள கிரகம் உச்சம் பெற்றிருந்தால் நல்லது?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

Advertiesment
உச்ச கிரகம்
ஒருவருடைய ஜாதகத்தில் எந்த வீட்டில்/இடத்தில் உள்ள கிரகம் உச்சம் பெற்றிருந்தால் நல்லது? உதாரணமாக ராமர் ஜாதகத்தில் 4/5 ஆம் வீடுகள் உச்சம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது?

பதில்: லக்னத்தில் உச்சம் பெற்ற கிரகம் இருந்தால் அந்த ஜாதகர் அதிர்ஷ்டம் நிறைந்தவர் எனக் கூறி விடலாம். நிர்வாகத் திறமை, அழகு, அறிவு, தோற்றப் பொழிவு உள்ளிட்ட அனைத்து திறமைகளும்/அம்சங்களும் அவர்களிடம் இயல்பாகவே இருக்கும். சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தாலும் பெரிய இடத்தைச் சேர்ந்தவர் போல் காட்சியளிப்பார்.

நல்ல யோகாதிபதியாக இருக்கும் கிரகம் நான்காவது இடத்தில் உச்சம் பெற்றால் தாய் வழி உறவுகள், சொத்து, தெய்வீகத் தன்மை, சுகபோகம் தடையில்லாமல் கிடைப்பது உள்ளிட்ட பலன்கள் இருக்கும்.

இதேபோல் 5வது இடத்தில் உச்சம் பெற்ற கிரகம் இருந்தால் புதையல் தோண்டு யோகம் ஏற்படும். தன் பிள்ளைகளால் அவர்கள் பெருமையடைவார்கள்.

ஒன்பதாவது இடத்தில் உச்சம் பெற்ற கிரகத்தை உடையவர்கள் அழியாத சொத்துக்களுக்கு அதிபதியாக இருப்பார்கள். 10இல் உச்சம் பெற்ற கிரகம் இருந்தால் அதிகாரம் மிக்க பதவிகள், அரசாள்பவர்களுக்கு மிக அருகில் இருக்கும் வல்லமை கிடைக்கும்.

பொதுவாக 1,4,5,9,10 ஆகிய இடங்களில் உச்சம் பெற்ற கிரகங்கள் இருந்தால் ராஜயோகப் பலன்கள் கிடைக்கும் என பண்டைய ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

இதேபோல் 6வது வீட்டில் உச்சம் பெற்ற கிரகம் இருந்தால் வழக்கு விவகாரங்களில் அலைச்சல் ஏற்படும். 12வது வீட்டில் இருந்தால் சுகபோகங்களுக்காக அதிகம் செலவு செய்பவராக இருப்பார். 8வது வீட்டில் உச்சம் பெற்ற கிரகம் இருந்தால் ஆயுள் தீர்க்கம் பெற்றவராக இருப்பார். ஆனால் அவரது வாழ்வில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும்.

ஏழாவது இடத்தில் உச்சம் பெற்ற கிரகம் இருந்தால் மனைவி கூறுவதற்கெல்லாம் தலையாட்டிச் செல்லும் நிலை இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil