Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கார் விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை தேவி பிரியா!... ஓட்டுனர் மரணம்!...

Advertiesment
devipriya
தமிழில் பல சீரியல்களில் நடித்தவர்  தேவிப்பிரியா. கடந்த 20 வருடங்களுக்கு மேல் இவர் சீரியல்களில் நடித்து வருகிறார்.. சின்னத்திரை நடிகையாக கலைமாமணி விருதையும் இவர் பெற்றிருக்கிறார். சீரியலில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் இவர் வலம் வருகிறார். இவர் நடித்த அண்ணாமலை, அத்திப்பூக்கள், சந்திரலேகா போன்ற சீரியல்கள் சீரியல் ரசிகைகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது..

இந்நிலையில்தான், இவரின் கார் விபத்தில் சிக்கி ஒருவர் மரணம் அடைந்திருக்கிறார்.. சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான தேனிக்கு அவர் சென்று கொண்டிருந்த போது பெரம்பலூர் அருகே சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் அவர் சென்று  கொண்டிருந்த காரின் டயர் பஞ்சரானது. எனவே காரை சாலையோரம் நிறுத்தி கார் ஓட்டுநர் முத்து கணேஷ் டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.. தேவிப் பிரியாவும் அவரது உதவியாளர் திவாகரும் காரிலிருந்து சில அடி தூரம் தள்ளி நின்று கொண்டிருந்தனர்..

அப்போது அடையாளம் தெரியாமல் வேகமாக வந்த ஒரு கார் பின்னாலிருந்து தேவி பிரியாவின் கார் மீது மோதியது.. அதில் கார் மொத்தமாக சிதைந்தது.. அதில் டயரை மாற்றிக் கொண்ட ஓட்டுனர் முத்து கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தேவி பிரியாவின் உதவியாளர் திவாகர் பலத்த காயத்தோடு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.. இதில் தேவிப்பிரியா அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிம்மதியாக உறங்க முடியவில்லை.. துபாயில் சிக்கி கொண்ட பிரபல நடிகையின் இன்ஸ்டா பதிவு..!