Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிராகன் படம் பார்த்து குஷியான RCB ரசிகர்கள்… இயக்குனர் பகிர்ந்த பதிவு!

Advertiesment
டிராகன் படம் பார்த்து குஷியான RCB ரசிகர்கள்… இயக்குனர் பகிர்ந்த பதிவு!

vinoth

, சனி, 22 பிப்ரவரி 2025 (08:02 IST)
விஜய்யின் GOAT படத்துக்குப் பிறகு ஏஜிஎஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள டிராகன் படம் நேற்று ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கடாயு லோஹர் மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் படம் மிகப்பெரிய அளவில் வசூலிக்கும் என இப்போதே கருத்துகள் எழ ஆரம்பித்துள்ளன. லவ் டுடே வெற்றியை அதிர்ஷ்டத்தின் மூலம் கிடைத்த வெற்றி அல்ல என்று ப்ரதீப் ரங்கநாதன் மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளார்.

இந்த படத்தில் ஐபிஎல் அணியான RCB ரசிகர்களுக்கு ஆதரவாக சில வசனங்கள் மற்றும் காட்சிகள் அமைந்துள்ளன. அதைப் பார்த்து பல ரசிகர்களும் அஸ்வத் மாரிமுத்துவுக்கு நன்றி சொல்லி பதிவுகளை இட அவர் பதிலுக்கு “உண்மையான RCB ரசிகன்” எனப் பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹோம்லி லுக்கில் அசத்தலான போஸ்… திவ்யபாரதியின் கண்கவர் போட்டோஸ்!