Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருச்செந்தூர் கடலில் 5 சவரன் சங்கிலியை தொலைத்த பெண்..! மீட்டு கொடுத்த தொழிலாளர்களுக்கு நன்றி..!

Girl Chain

Senthil Velan

, திங்கள், 24 ஜூன் 2024 (17:26 IST)
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கடலில் புனித நீராடும்போது பெண் ஒருவர் தவறவிட்ட 5 சவரன் தங்க செயினை சிப்பி அரிக்கும் தொழிலாளர்களும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களும் இணைந்து கண்டுபிடித்து கொடுத்தனர்..
 
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக தூத்துக்குடியை சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி ஜோதி, அவரது தங்கை வாசுகி ஆகியோர் குடும்பத்துடன் வந்தனர். அவர்கள் அனைவரும் கடலில் புனித நீராடிய போது வாசுகி அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலி கடலில் விழுந்து கடற்கரை மணலில் புதைந்து போனது.
 
இதனால் பதறிப்போன ஜோதி தனது கணவர் உதவியுடன் உடனடியாக திருச்செந்தூர் புறநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தனது சங்கிலி மீண்டும் கிடைக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கடற்கரையில் காத்துக்கொண்டிருந்தார். 
 
தங்கச்சங்கிலி தொலைந்து இடத்துக்கு 50க்கும் மேற்பட்ட கடலோர பாதுகாப்பு குழுவினர் சிப்பி அரிக்கும் தொழிலாளர்களுடன் சேர்ந்து தங்கச்சங்கிலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். கடற்கரை மணலில் கைகளை வைத்து சலிப்பில்லாமல் சல்லடையாக சலித்தனர். சுமார் 5மணி நேர போராட்டத்துக்கு பிறகு தொலைந்து போன தங்கச்சங்கிலி மீட்கப்பட்டது.
 
இதனையடுத்து அந்த தங்கச்சங்கிலியை கடலோர பாதுகாப்பு குழுவினர் திருச்செந்தூர் புறக்காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர் புகார் அளித்த ஜோதி குடும்பத்தாருக்கு போலீசார் தகவல் அளித்து தொலைந்து போன தங்கச்சங்கிலியை ஒப்படைத்தனர். 

 
தங்கச்சங்கிலியை நீண்ட நேரம் போராடி மீட்டு கொடுத்த கடலோர பாதுகாப்பு குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தனது சங்கிலியை மீட்டு கொடுத்த அனைவருக்கும், ஜோதி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெறிசெயல்..!!