தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க நினைக்கும் மத்திய அரசையும், இந்தி திணிப்பையும் தமிழர்கள் ஒன்று சேர்ந்து எதிர்த்து நிற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு விரிவான அறிக்கை வெளியிட்ட அவர் “தமிழர்களின் தனித்துவமான குணம் என்பது சுயமரியாதை உணர்வு. அதனை சீண்டி பார்க்க எவர் நினைத்தாலும் அனுமதிக்க மாட்டோம். மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழையும், தமிழர் பண்பாட்டையும் சிதைக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசினுடைய திட்டத்தின் உள்நோக்கத்தை புரிந்துக் கொண்டு தமிழ்நாடு முழுவீச்சாக இன்றைக்கு இதை எதிர்க்கிறது என்றால், அதற்கான அடித்தளத்தை திராவிட இயக்க தலைவர்கள் அன்றே வலுவாக கட்டமைத்திருக்கிறார்கள்.
இன்னொரு மொழிப்போர் நம் மீது திணிக்கப்பட்டால், தமிழைக் காப்பதற்காகச் சிறைக் கொடுமைக்குள்ளாகி, தன் இன்னுயிர் ஈந்த நடராசன், தாளமுத்து எனும் மாவீரர்களை நெஞ்சில் ஏந்தி களம் புகுவோம். தமிழை காப்போம்” என கூறியுள்ளார்.
மேலும் “"இந்தி எழுத்துகளை அழித்தால் வடமாநிலப் பயணிகள் எப்படி ஊர்ப் பெயர்களை அறிந்துகொள்வார்கள்?" என்று 'அறிவுப்பூர்வமான' வினாவை எழுப்பி, தங்கள் இந்தி விசுவாசத்தைக் காட்டுகிறார்கள் இங்குள்ள பா.ஜ.க.வினர்!
தமிழர்கள் வடமாநிலங்களுக்குச் செல்லும்போது எப்படி அறிந்துகொள்கிறார்களோ அப்படியே அறிந்துகொள்ளட்டும்!” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K