Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளையராஜாவை நேரில் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்! - சிம்போனி நிகழ்ச்சிக்கு வாழ்த்து!

Advertiesment
MK Stalin

Prasanth Karthick

, ஞாயிறு, 2 மார்ச் 2025 (13:07 IST)

பிரபல தமிழ் இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது லண்டன் நிகழ்ச்சிக்காக வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

 

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற மொழி படங்கள் பலவற்றிற்கும் இசையமைத்தவர் இளையராஜா. சுமார் 1000 படங்களுக்கு மேல் பல ஆயிரம் திரையிசைப் பாடல்களை இயற்றியுள்ள இளையராஜா தற்போது மேற்கத்திய இசை பாணியில் புதிய சிம்போனியை அமைத்துள்ளார். இந்த சிம்போனி அரங்கேற்றம் லண்டனில் மார்ச் 8 அன்று நடைபெற உள்ளது. இதையொட்டி இளையராஜாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார்,.

 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் “ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா அவர்கள். தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன்.

 

அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார். 

 

உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான #இளையராஜா அவர்களின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்! ” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதுச்சேரியில் 12வது உலகத் தமிழ் மாநாடு.. பிரதமர், ஜனாதிபதி வருகை..!