இந்தியில் Indias Got Talent என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் யூட்யூபர் ஒருவர் போட்டியாளரிடன் தகாத கேள்விகளை கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை பிரபல யூட்யூபரான ரன்வீர் அல்லாபாடியா உள்ளிட்டோர் நடுவராக இருந்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு போட்டியாளரிடம் ரன்வீர் “நீங்கள் உங்கள் பெற்றோர்கள் உடலுறவு கொள்வதை பார்ப்பீர்களா? அல்லது அவர்களுடன் இணைந்து கொள்வீர்களா?” என்று கொச்சையாக பேசியதாக கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல்கள் ஒலித்து வருகின்றன.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அசாம் முதலமைச்சர் ஹேமந்த் பிஸ்வா “இன்று கவுஹாத்தி காவல்துறை சில யூட்யூப் மற்றும் சமூக வலைதள பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி, அசிஷ் சஞ்சால்னி, ஜஸ்பிரித் சிங், அபூர்வா மகிஜா, ரன்வீர் அல்லாபாடியா, சமய் ரெய்னா உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
இவர்கள் மீது இந்தியாஸ் காட் டேலண்ட் என்ற நிகழ்ச்சியில் அபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K