Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடந்த வாரம் போலவே இந்த வாரமும் பங்குச்சந்தை ஏற்றம்.. சென்செக்ஸ் சுமார் 1000 புள்ளிகள் உயர்வு..!

Siva
திங்கள், 24 மார்ச் 2025 (11:09 IST)
கடந்த வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை பங்குச்சந்தை ஏற்றம் கண்டதால், ஏகப்பட்ட நஷ்டத்தில் இருந்த முதலீட்டாளர்கள் ஓரளவு நஷ்டத்தை மீட்டுக் கொண்டு வந்துள்ளனர். இந்த வாரத்திலும் பங்குச்சந்தை, வாரத்தின் முதல் நாளே சுமார் 1000 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்ததை கண்டு முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 
சென்செக்ஸ் 80,000 புள்ளிகளை மீண்டும் எட்டும் வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
 
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியதுமே ஏற்றத்தில் இருந்து வரும் நிலையில், சற்றுமுன் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 910 புள்ளிகள் உயர்ந்து 77,795 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை 265 புள்ளிகள் உயர்ந்து 23,620 புள்ளிகளில் வர்த்தகம் செய்கிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் கோடக் மகேந்திரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டெக் மகேந்திரா, எச்டிஎப்சி வங்கி, விப்ரோ, அப்போலோ ஹாஸ்பிடல், டி.சி.எஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
அதே நேரத்தில், ஹிந்துஸ்தான் லீவர், இன்ஃபோசிஸ், பிரிட்டானியா, ஹீரோ மோட்டார், இண்டஸ் எண்ட் வங்கி, டைட்டான் உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments