Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துலாம்: புரட்டாசி மாத ராசி பலன்கள்

Advertiesment
துலாம்: புரட்டாசி மாத ராசி பலன்கள்
, வியாழன், 20 செப்டம்பர் 2018 (14:49 IST)
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்). கிரக நிலைகள்: செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் இருந்த  சூரிய பகவான்  ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

அக்டோபர் 3 ந்தேதி அயன,சயன, போக ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார்.  மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு ராசியில்   இருந்த குருபகவான் தனம், குடும்ப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி ராசியில்  இருக்கும்  சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.
 
பலன்: கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கும் துலாராசி அன்பர்களே! இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும்.  எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி  உற்சாகம் உண்டாகும்.
 
ராசியாதிபதி சுக்ரன் ராசியிலேயே குருவுடன் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் விஷேஷங்கள் இனிதே நடக்கும். எனினும் குடும்பாதிபதி செவ்வாய், கேதுவுடன்  இணைந்து இருப்பதால் வார்த்தைகளில் சிறிது கவனம் அவசியம். நீங்கள் சொல்வதற்கு மாறாக புரிந்து கொண்டு மனசங்கடங்கள் உருவாகலாம். கவனம்  தேவை.
 
தொழில் ஸ்தானத்தை செவ்வாய் மற்றும் கேது பகவான் பார்ப்பதால் வார்த்தைகளில் கவனம் அவசியம். முடிந்தவைகளுக்கு மட்டும் வாக்கு கொடுங்கள். அதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசனை செய்து கொடுக்கவும்.
 
உத்யோகஸ்தர்களுக்கு மனதில் சில சஞ்சலங்கள் ஏற்படலாம். முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் வரலாம். சிறுது காலத்திற்கு ஒத்து வைத்து தீர ஆலோசித்து முடிவெடுப்பது நன்மை தரும். வர வேண்டிய பணம் கைக்குக் கிடைக்கும்.
 
பெண்களுக்கு பணப்பிரச்சனைகள் தீரும். கல்வி சம்பந்தமான தடைபட்டிருந்த காரியங்கள் இனிதே நடக்கும். குடும்பத்தில் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவி செய்வார்கள். நீங்கள் பாடங்களைப் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும். தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.
 
கலைத்துறையினருக்கு ஆரோக்கிய குறைபாடுகளால் உங்கள் வேலையை தக்க நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம். தக்க நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் ஆதாயம் கிடைக்க நல்லோர் உடன் இருத்தல் வேண்டும். நம்மவர் என்று எண்ணி எதிலும் யாரையும்  நம்பி ஏமாற வேண்டாம். அரசு விவகாரங்களில் பொறுமையாக கையாள வேண்டிய விசயங்கள் அனைத்தையும் அப்படியே சற்று தள்ளிப்போடுவது உத்தமம்.
 
சித்திரை 3, 4 பாதம்: இந்த மாதம் மற்றவர்களுடன்  வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும்  பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை.
 
சுவாதி: இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது.  உத்தியோகத்தில்  இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை தரும்.
 
விசாகம் 1, 2, 3ம்  பாதம்: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே  இருந்த பூசல்கள்  சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையன பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக் காக பாடுபட வேண்டியும் இருக்கும்.
 
பரிகாரம்: நவகிரக புதன் பகவானுக்கு பச்சை பயறு நெய்வேத்யம் செய்து வருவது நல்லது.
 
சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 30; அக்டோபர் 1.
 
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 22, 23,24.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கன்னி: புரட்டாசி மாத ராசி பலன்கள்