Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கும்பம்: புரட்டாசி மாத ராசி பலன்கள்

Advertiesment
கும்பம்: புரட்டாசி மாத ராசி பலன்கள்
, வியாழன், 17 செப்டம்பர் 2020 (12:51 IST)
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்) - கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய்(வ) -  சுக ஸ்தானத்தில்  ராஹூ - ரண ருண ரோக  ஸ்தானத்தில் சுக்ரன்  - களத்திர ஸ்தானத்தில்  சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தொழில் ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் குரு, சனி என  கிரகங்கள் வலம் வருகின்றன. 

பலன்:
இந்த மாதம் உங்களுக்கு நல்ல பலனை அள்ளித்தரும் நிலையில் இருக்கிறது. நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். எல்லாவற்றிலும் இருந்து வந்த மனகவலையை நீங்கும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம். திட்டமிட்டபடி காரியங்களை செய்ய  முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எனவே எந்த ஒரு வேலையை செய்வதாய் இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை.
 
மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.
அவிட்டம் 3, 4 பாதம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.  கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் மனதில் ஏதாவது குறை இருக்கும் வெளிக்காட்டமாட்டீர்கள். பிள்ளைகளுடன்  அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும்.
 
சதயம்:
இந்த மாதம்  மனோ தைரியம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த  பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். பாடங்கள் படிப்பதில் தீவிர கவனம் செலுத்துவீர்கள். காரிய தடை தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது.
 
பூரட்டாதி 1, 2, 3  பாதம்:
இந்த மாதம் சமயத்திற்கேற்ப கருத்துக்களை மாற்றிக் கொண்டு செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவை குறைக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மன அமைதி குறையலாம். கூடுமானவரை பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும்.
 
பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது காரிய தடைகளை போக்கும். நன்மை கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 18, 19; அக்டோபர் 15, 16
அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 9, 10.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகரம்: புரட்டாசி மாத ராசி பலன்கள்