ரொம்ப நாள் கழிச்சி ஒரு நல்ல காமெடி படம் வருதுடோய் - ட்ரெண்டிங்கில் சுமோ ட்ரைலர்!

Webdunia
புதன், 11 டிசம்பர் 2019 (14:12 IST)
சுமோக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி காமெடி கலந்த செண்டிமெண்ட்  படமாக உருவாகியிருக்கும் " சுமோ " என்ற படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்துள்ளார். "வணக்கம் சென்னை" படத்திற்கு பிறகு பிரியா ஆனந்த் இரண்டாவது முறையாக இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரமொன்றில் ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் சுமோ மல்யுத்த வீரர் யோசினோரி தாஷிரோ நடித்துள்ளார். 
 
இப்படத்திற்கு நடிகர் சிவாவே திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து இப்படத்தின் கலகலப்பான ட்ரைலர் நேற்று வெளியாகி இன்று யூடியூப் ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடத்தில் உள்ளது 
 
இந்த ட்ரைலர் ரசிகர்களிடையே செம்ம வரவேற்பை பெற்று இப்போதே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. "சுமோ" படம் பொங்கல் ரேஸில் கலந்துகொண்டு ரஜினியின் தர்பார் படத்துடன் மோதவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தீபிகா படுகோன் 2வது முறையாக கர்ப்பம்.. அட்லி படத்திற்கு பாதிப்பு ஏற்படுமா?

டிரம்ப் சொன்னது எல்லாமே பொய்.. 1 மணி நேரத்திற்கு 7 பொய் சொல்பவர் டிரம்ப்.. ஈரான் குற்றச்சாட்டு..!

ஆர்யாவின் 'மிஸ்டர் எக்ஸ்'.. முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இவ்வளவு தானா? முழு ரிப்போர்ட் இதோ!

ஜெய்பீம் இயக்குனருடன் மீண்டும் இணையும் சூர்யா!.. பரபர அப்டேட்!..

மாசம் 1.5 கோடி வட்டி.. வாழ்க்கை செட்டில்! நயன்தாரா கணவர் போடும் 350 கோடி மாஸ்டர் பிளான்

அடுத்த கட்டுரையில்
Show comments