அனுஷ்காவின் தரமான நடிப்பில் மிரட்டும் "நிசப்தம்" ட்ரைலர்

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (14:18 IST)
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான அனுஷ்கா ஷெட்டி தற்போது இயக்குனர் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகிவரும் “சைலன்ஸ்” என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகர் மாதவன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ஷாலினி பாண்டே , அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேடிசன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம்  என ஐந்து மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படம் விறு விறுப்பான த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் ட்ரைலரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியாகி வெளியிட்டுள்ளார்.  வாய் பேசமுடியாமல், காது கேட்காமல் பேய்களிடம் மாட்டிக்கொள்ளும் அனுஷ்காவை அஞ்சலி காப்பாற்றி உண்மை என்ன என்பதை கண்டறிகிறார்.

பின்னர் இதெல்லாம் பேய்களால் நடக்கிறது என்பதை அறிந்துக்கொண்ட அஞ்சலி அதன் மீது நம்பிக்கையில்லாமல் தொடர்ந்து அனுஷ்காவை வைத்து தீவிரமாக விசாரணை மேற்கொள்கிறார். கொரோனா ஊரடங்கினாள் தள்ளி சென்ற இப்படம் வருகிற அக்டோபர் 2ம் தேதி அமேசான் ப்ரைமில் ரிலீஸ் ஆகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!

தனுஷோட அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்!.. ஹெச்.வினோத் என்னாச்சி?...

ஜனநாயகன் ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல்தான் ரிலீஸாகும்!.. பணத்தை திருப்பி வாங்கிக்கோங்க!...

‘புதுப்பேட்டை 2’ அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. அப்போ தனுஷ் லைன் அப்பில் இருக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments