Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகுமாரின் அடுத்த பட டீசர் ரிலீஸ்!

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (19:16 IST)
நடிகர் மற்றும் இயக்குநர் சசிகுமார் நடித்து முடித்துள்ள சில படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் அவர் சமீபத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். சத்யசிவா என்பவரின் இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்தில் சசிகுமார் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீஸர் டிசம்பர் 23ஆம் தேதி அதாவது இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இதனை அடுத்து சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் காமன்மேன் என்றும் அறிவிக்கப்பட்டு அதன்பின் டீசரும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடி ஆக்சன் காட்சிகள் மற்றும் த்ரில் காட்சிகள் இந்த டீசரில் இருப்பதால் த்ரில், ஆக்சன் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
சசிகுமார் ஜோடியாக ஹரிப்பிரியா நடிக்கும் இந்தப் படத்தில் விக்ராந்த் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்பதும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்'

ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ 2ஆம் சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments