சசிகுமாரின் 21வது படத்தின் டைட்டில்-பர்ஸ்ட்லுக் போஸ்டர்!
, செவ்வாய், 21 டிசம்பர் 2021 (19:41 IST)
பிரபல நடிகர் சசிகுமாரின் 21வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசம்பர் 23 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சசிகுமார் நடித்த இரண்டு படங்கள் ஏற்கனவே ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் அவர் தற்போது தனது அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த படத்தை சத்ய சிவா என்ற ஒரு இயக்க உள்ளார் என்பதும் செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக ஹரிப்பிரியா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் விக்ராந்த் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
அடுத்த கட்டுரையில்