அடுத்த படத்திற்காக 3 ஐடியாக்கள் வைத்திருக்கும் ஷங்கர் .. அதில் ஒன்று ஜேம்ஸ்பாண்ட்?

Siva
திங்கள், 1 ஜூலை 2024 (22:00 IST)
இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த படத்திற்காக மூன்று ஐடியாக்கள் வைத்திருப்பதாகவும் அதில் ஒன்று ஜேம்ஸ்பாண்ட் என்று கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 திரைப்படம் வரும் பனிரெண்டாம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் விளம்பர பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்தது. 
 
இந்த நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவான கேம் சேஞ்சர் என்ற படத்தின் படப்பிடிப்பும் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்றும் இன்னும் இந்த படம் 15 நாள் படப்பிடிப்பு மட்டுமே மீதம் இருப்பதாகவும் கூறப்படுகிறது அதுவும் இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆனதும் முடிந்துவிடும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் தனது அடுத்த படத்திற்காக மூன்று ஐடியாக்கள் வைத்திருப்பதாகவும் ஒன்று வரலாற்று கதை அம்சம் இன்னொன்று ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைல் படம் இன்னொன்று சயின்டிபிக்ஷன் படம் என்று ஷங்கர் கூறியுள்ளார். இந்த மூன்றில் ஜேம்ஸ்பாண்ட் படம் அவரது அடுத்த படமாக உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மலேசியாவில் அஜித்துடன் ஸ்ரீலீலா எடுத்து கொண்ட செல்பி: 'ஏகே 64' படத்துக்கான முன்னோட்டமா?

பி.யு.சின்னப்பாவுக்காக ரஜினி செய்த உதவி.. இது யாருக்கும் தெரியாதே

விஜய் கொடுத்த துப்பாக்கிதான் சுடுமா? திடீரென வைரலாகும் சரத்குமாரின் பதிவு

என்கிட்ட சாரி கேக்கணும்னு அவசியமே இல்ல.. ஜெயலலிதா பற்றி சிவக்குமார் பகிர்ந்த தகவல்

ரஜினிகாந்தின் 'படையப்பா' இன்று ரீரிலீஸ்.. அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments