Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எஸ் ஜே சூர்யா, சித்தார்த்தோடு மலேசியா பறந்த கமல்ஹாசன்… படு ஸ்பீடில் இந்தியன் 2 ப்ரமோஷன்!

எஸ் ஜே சூர்யா, சித்தார்த்தோடு மலேசியா பறந்த கமல்ஹாசன்… படு ஸ்பீடில் இந்தியன் 2 ப்ரமோஷன்!

vinoth

, சனி, 29 ஜூன் 2024 (08:32 IST)
கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. டிரைலரில் அதிக காட்சிகளில் கமல் இல்லை. அதனால் இந்த பாகத்தில் அவர் குறைவான நேரமே வருவாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதே போல படத்தில் சேனாபதி கதாபாத்திரத்தின் வயது 106 எனக் காட்டப்படுகிறது. அதனால் எப்படி 106 வயது முதியவரால் படத்தில்  வருவது போல சண்டை போட முடியும் என விமர்சனங்கள் எழுந்தன. இதற்கான பதில் படத்தைப் பார்த்தால்தான் தெரியும்.

இந்நிலையில் விக்ரம் படத்துக்கு எப்படி கமல்ஹாசன் நாடு நாடாக சென்று ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டாரோ அதுபோல இந்தியன் 2 வுக்கும் மேற்கொள்ள உள்ளார். அதன் முதல் கட்டமாக படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள எஸ் ஜே சூர்யா, சித்தார்த் ஆகியோருடன் அவர் மலேசியாவுக்கு தனி விமானத்தில் சென்றுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹரா படத்தின் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்… எப்போது ரிலீஸ்?