Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் கோட் படத்துக்கு இளையராஜா ஸ்டுடியோவில் நடக்கும் பின்னணி இசைக்கோர்ப்பு!

vinoth
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (08:21 IST)
விஜய் நடித்துள்ள கோட் (the greatest of all time) திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக கிராபிக்ஸ் பணிகள் உட்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் மூன்று பாடல்கள் இதுவரை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. அதிலும் கடைசியாக வெளியான ‘ஸ்பார்க்’ பாடல் கடுமையான ட்ரோல்களை சந்தித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்துக்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகள் தற்போது இளையராஜாவின் ஸ்டுடியோவில் நடந்து வருகிறதாம். வழக்கமாக தன் படங்களுக்கு துபாயில் இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு சென்னையிலேயே இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments