Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் விஜய் - நடிகர் சத்யராஜ்

Webdunia
திங்கள், 19 ஜூன் 2023 (20:38 IST)
இளைஞர்களின்  நம்பிக்கை நட்சத்திரம் விஜய் என்று  நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்.  இவர் கடந்த சனிக்கிழமை அன்று விஜய்யின் கல்வி விருது நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிக மதிப்பெண் பெற்ற  மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, சான்றிதழ் மற்றும் உதவித் தொகை வழங்கி, விருந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் மாணவர்களிடம் பேசிய பேச்சு தமிழகத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில்,  இன்று கோவையில் தனியார்  நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சத்யராஜிடம் விஜய்யின் கல்வி நிகழ்ச்சி பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த சத்யராஜ் கூறியதாவது:

மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்துவம் விதமாக விஜய்  நடத்திய கல்வி நிகழ்ச்சி ரொம்ப  நல்ல விஷயம். அவர் அரசியலுக்கு வருவது பற்றி வெளிப்படையாக கூறாத நிலையில், அதுபற்றி நான் பேசுவது நன்றாக இருக்காது. அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றிப் படிக்க வேண்டும் என்று அவர் கூறியது  மகிழ்ச்சியான விஷயம்.  இளைஞர்களின்  நம்பிக்கை நட்சத்திரம் விஜய் என்று கூறினார்.

மேலும், ‘’லியோ படத்தில் இடம்பெற்ற விஜய் சிகரெட் புகைப்பது போன்ற காட்சி பற்றி கேட்தற்கு,  நடிகர் தாங்கள் தேர்வு செய்யும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப சில விஷயங்கள் செய்ய வேண்டும்’’ என்று கூறினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஹன்சிகா மோத்வானியின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!

சூரியின் அடுத்த படத்தில் இணையும் பிரியாமணி!

விஜய் சேதுபதியை இயக்கும் சுந்தரபாண்டியன் இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன்!

பாதியாகக் குறைக்கப்படும் சிம்பு தேசிங் பெரியசாமி படத்தின் பட்ஜெட்!

அடுத்த கட்டுரையில்
Show comments