Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலை விபத்தில் ஒற்றை காலை இழந்த இளம் நடிகர்....ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (14:21 IST)
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் மறைந்த ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா. இவரின் உறவினரும் கன்னட சினிமா தயாரிப்பாளரான  எஸ்.ஏ.ஸ்ரீனிவாஸ் என்பவரின் மகன் சூரஜ் குமார்( 24).

இவர் அனூப் ஆண்டனி இயக்கத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ண பகவான் பரமாத்மா என்ற படத்தில்  நடித்திருந்தார். இப்படம் வெளியாகவில்லை. இவர் சினிமாவுக்காக தன் பெயரை துருவன் என்று மாற்றிக் கொண்டர்.

இந்த நிலையில், இவர் தன் இருசக்கரவாகனத்தில் கடந்த சனிக்கிழமை அன்று மைசூரில் இருந்து உதகைக்கு பயணித்துள்ளார்.

பேரூர் அருகே மைசூரு குண்ட்லுபேட் தேசிய நெடுஞ்சாலையில் மாலை 4 மணியளவில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு டிராக்டரை முந்திச் செல்ல முயன்றார்.

ஆனால், அவரது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சூரஜ் படுகாயமடைந்த நிலையல் மைசூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அவரது உயிரைக் காப்பாற்றும் பொருட்டு, சேதமடைந்துள்ள அவரது வலது காலின் முழங்காலிற்கு கீழே உள்ள பகுதியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

160 கோடி ரூபாய் பட்ஜெட்.. வசூல் 50 கோடிதான்… அப்செட்டில் அட்லி!

கலர்ஃபுல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

பா விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன் நடிக்கும் ‘அகத்தியா’ .. கவனம் ஈர்க்கும் மிரட்டலான டிசர்!

சசிகுமார் & சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments