Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் முதல் படத்தின் ரிலீஸ் எப்போது?

Webdunia
வெள்ளி, 8 மார்ச் 2019 (22:35 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய யோகிபாபு ஒருசில படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் அவர் ஹீரோவாக நடித்த படங்களில் ஒன்றாகிய 'பட்டிபுலம்' என்ற படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது
 
இந்த படத்தை இன்று பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த படம் இம்மாதம் வெளியாகவிருப்பதாக படத்தின் குழுவினர் அறிவித்துள்ளனர். அனேகமாக வரும் 22ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளது
 
இந்த படத்தில் வீரசமர், அமிதா ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தாலும் வியாபார நோக்கம் கருதி இந்த படத்தின் ஹீரோ என யோகிபாபுவையே படக்குழுவினர் விளம்பரம் செய்துவருகின்றனர். எனவே யோகிபாபு ஹீரோவாக நடித்து வெளிவரும் முதல் படம் இதுதான் என்று கூறப்படுகிறது. வல்லவன் இசையில், சுரேஷ் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டதா?

நயன்தாரா & நெட்பிளிக்ஸ் மீது வழக்குத் தொடர்ந்த தனுஷ்…!

15 ஆண்டுகளாக தொடரும் காதல்… வருங்கால கணவர் பெயரை அறிவித்த கீர்த்தி சுரேஷ்…!

தேவி ஸ்ரீ பிரசாத்தால் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம்!

சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்க ஓகே சொன்ன ஜெயம் ரவி!

அடுத்த கட்டுரையில்
Show comments