Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யோகி பாபு நடிப்பில் ராதா மோகன் இயக்கும் புதிய படம்… தயாரிப்பாளர் இவரா?

யோகி பாபு நடிப்பில் ராதா மோகன் இயக்கும் புதிய படம்… தயாரிப்பாளர் இவரா?
, செவ்வாய், 23 மே 2023 (08:44 IST)
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான  படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார்.  அந்த வகையில் அவர் நடித்த தர்மபிரபு மற்றும் மண்டேலா ஆகிய படங்கள் வெற்றியடைந்ததை அடுத்து இப்போது மேலும் சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் இப்போது அவர் மொழி, பயணம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும், அந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் சீரியஸா படமெடுத்தா ஓடமாட்டேங்குது… வெங்கட் பிரபு புலம்பல்!