Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

படப்பிடிப்பு தளத்தில் அடித்துக்கொண்ட யோகிபாபு உதவியாளர்கள்!

படப்பிடிப்பு தளத்தில் அடித்துக்கொண்ட யோகிபாபு உதவியாளர்கள்!
, செவ்வாய், 25 ஜனவரி 2022 (09:50 IST)
தமிழின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான யோகிபாபுவின் மேனேஜரும் டிரைவரும் படப்பிடிப்பு தளத்தில் அடித்துக்கொண்ட செய்தி கோலிவுட்டில் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவின் காமெடி பிரபலங்களான சந்தானம், பரோட்டா சூரிக்கு அடுத்து காமெடி கிங்காக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான  படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார்.  அந்த வகையில் அவர் நடித்த தர்மபிரபு மற்றும் மண்டேலா ஆகிய படங்கள் வெற்றியடைந்ததை அடுத்து இப்போது மேலும் சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவரது புகழுக்கு இழுக்கு செய்யும் விதமாக அவரின் மேனேஜரும் டிரைவரும் படப்பிடிப்பு தளம் ஒன்றில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பு அளவுக்கு சென்றுவிட்டதாம். இதனால் யோகி பாபு இருவர் மீதும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்துக்குப் பிறகு யோகி பாபுவின் மேனேஜர் வேலையை விட்டு சென்றுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் புதியவகை ஒமிக்ரான்: 6 குழந்தைகள் பாதிப்பு!