Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண் உதவி இயக்குனரின் திருமணம் - வித்தியாசமாக உதவி செய்த யோகி பாபு!

Advertiesment
பெண் உதவி இயக்குனரின் திருமணம்  -  வித்தியாசமாக உதவி செய்த யோகி பாபு!
, திங்கள், 19 அக்டோபர் 2020 (17:00 IST)
நகைச்சுவை நடிகர் யோகி பாபு பெண் இயக்குனர் ஒருவரின் திருமணத்துக்காக அவரின் இயக்கத்தில் இலவசமாக நடிக்க ஒத்துக்கொண்டுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை சாம்ராஜ்யம் செய்து வந்த வடிவேலுவின் இடத்தில் இப்போது இருப்பது யோகி பாபுதான். அவரது யதார்த்தமான காமெடி , உடல் தோற்றம் உள்ளிட்டவை வெகுஜன ரசிகர்களால் விரும்பப்பட்டு குறைந்த கால இடைவெளியில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று நாளுக்கு 10 லட்ச ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருகிறார்.

பேய் மாமா என்ற பெயரில் வடிவேலுவை வைத்து படம் இயக்க இருந்த இயக்குனர் ஷக்தி சிதம்பரம் இப்போது யோகி பாபுவை வைத்து அந்த படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் அறிமுக விழாவில் பேசிய யோகிபாபு ‘இது ஹீரோ பேஸ்… என் முகம் அதற்கானது அல்ல. அதனால் எப்போதும் காமெடியனாகவே நடிப்பேன்’ எனக் கூறியுள்ளார்.

மேலும் தான் அதிகமாக சம்பளம் வாங்குகிறோம் என்ற விமர்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில் நேற்று பேசினார். அப்போது ‘பெண் உதவி இயக்குனர் ஒருவர் என்னிடம் ஒரு படம் இயக்கினால்தான் எனக்கு திருமணம் நடக்கும். அதனால் எனக்கு ஒரு படம் பண்ணிக்கொடுங்கள் எனக் கேட்டார். அவருக்காக நான் சம்பளம் வாங்கிக்கொள்ளாமல் நடிக்கிறேன் ‘ என மேடையிலேயே அறிவித்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரசிகர்களுக்காக சூரரைப் போற்று பிரிமியர் – நட்சத்திர விடுதியில்!