Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’எனிமி’ படத்தை ஓடிடியில் வெளியிடாதது ஏன்? விஷால் தகவல்

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (22:15 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஷால். இவர் ஆர்யாவுடன் இணைந்து நடித்துள்ள படம் எனிமி. இப்படத்தை ஓடிடியில் ஏன் வெளியிடவில்லை என்ற காரணத்தை கூறியுள்ளார் விஷால்.

விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, கருணாகரன் உள்பட பல நடித்த இந்த திரைப்படத்தின் பாடல்களுக்கு எஸ்.தமன் அவர்களும் பின்னணி இசையை சாம்.சி.எஸ் அவர்களும் அமைத்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் எஸ் வினோத்குமார் தயாரித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ளது.

இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், எனிமி படத்தின் புரமொஷன் நிகழ்ச்சியில் நடிகர் விஷால் ஒரு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார். அதில், இப்படத்தை ஓடிடியில் வெளியிட்டிருந்தால் நிறைய லாபம் அடைந்திருக்கலாம். ஆனால், இப்படத்தை  தியேட்டர்களில் தான் வெளியிடுவேன் என எனிமி படத் தயாரிப்பாளர் காத்திருந்தார். இப்படம் நன்றாக உருவாகியுள்ளது. இப்படம் என் வாழ்வில் சிறந்த படமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறுகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. நெகிழ்ச்சியான பதிவு..!

“என் வழியில் நான் உறுதியா நிற்க எம்ஜிஆர் - சிவாஜிக்கு கிடைத்த ரிசல்ட் தான் காரணம்” ; ‘சாமானியன்’ ராமராஜன்!

புதிய கதாபாத்திரங்களில் நடிக்க புதியவர்களோடு பணியாற்ற விரும்புகிறேன்-பாகுபலி சீரிஸில் பின்னணி குரல் கொடுத்த சரத் கெல்கர்!

‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் சிறந்த நண்பன் மற்றும் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது!

என்னய்யா இதெல்லாம் எடுத்து வெச்சிருக்கீங்க.. வாழ்க்கை வரலாற்று படத்தில் ரேப் சீன்! – அதிர்ச்சியடைந்த டொனால்ட் ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments