Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாம் பாக படங்கள் தோல்வி அடைவது ஏன்? சுசீந்திரன் விளக்கம்

Webdunia
திங்கள், 1 ஜூலை 2019 (20:06 IST)
தமிழில் கடந்த சில ஆண்டுகளாகவே இரண்டாம் பாக சீசன் தொடர்ந்து வருகிறது. இதில் பெரும்பாலும் முதல் பாகம் வெற்றி பெற்ற படங்களாக இருந்தாலும் இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்ட தோல்வி அடைந்து வருகிறது. இதற்கு என்ன காரணம் என்பதை 'வெண்ணிலா கபடிக்குழு 2' படத்தில் பணிபுரிந்த இயக்குனர் சுசீந்திரன் பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.
 
பொதுவாக இரண்டாம் பாதி படத்தை எடுப்பவர்கள் முதல் பாதி வெற்றி பெற்றபின்னர் அதே சாயலில் இரண்டாம் பாகம் இருக்க வேண்டும் என்று நினைத்து கதை எழுதுகின்றனர். ஆனால் அப்படி கதை எழுதும்போது அமையாது. முதல் பாகத்திற்கு கதை எழுதும்போதே இரண்டாம் பாகத்திற்கும் சேர்த்து கதை எழுதினால்தான் அது உண்மையான இரண்டாம் பாகமாக அமையும். அந்த படமும் வெற்றி பெறும். பாகுபலி, பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்றது இதனால்தான். அதேபோல் தான் 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் கதையை எழுதும்போதே இந்த படத்தின் இரண்டாம் பாக கதையையும் நான் ஏற்கனவே எழுதிவிட்டேன் என்று சுசீந்திரன் கூறியுள்ளார்.
 
இயக்குனர் சுசீந்திரன் கூறியது போலவே விஐபி 2, ஜெய்ஹிந்த் 2, டார்லிங் 2, ஜித்தன் 2, கோ 2, மணல் கயிறு 2, புலன்விசாரணை 2, சென்னையில் ஓர் நாள் 2, பில்லா 2, சிங்கம் 2, மாரி 2, சண்டக்கோழி 2, அரண்மனை 2, சார்லி சாப்ளின் 2, உறியடி 2, போன்ற பல இரண்டாம் பாக படங்கள் தோல்வி அடைந்தன. இந்த படங்கள் அனைத்தும் முதல் பாகத்தின் கதைக்கும் இரண்டாம் பாகத்தின் கதைக்கும் மிகக்குறைந்த அளவே சம்பந்தம் இருப்பதும் தலைப்பை மட்டுமே பயன்படுத்தி இரண்டாம் பாகம் எடுப்பதும் தோல்விக்கு காரணமாக அமைந்தது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டதா?

நயன்தாரா & நெட்பிளிக்ஸ் மீது வழக்குத் தொடர்ந்த தனுஷ்…!

15 ஆண்டுகளாக தொடரும் காதல்… வருங்கால கணவர் பெயரை அறிவித்த கீர்த்தி சுரேஷ்…!

தேவி ஸ்ரீ பிரசாத்தால் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம்!

சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்க ஓகே சொன்ன ஜெயம் ரவி!

அடுத்த கட்டுரையில்
Show comments