Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“ஏன் ரஜினி கேட்டும் பொன்னியின் செல்வனில் நடிக்கவைக்கவில்லை….” மணிரத்னத்தில் பதில் இதுதான்!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (09:14 IST)
இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்தின் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு சமீபத்தில் பிரம்மாண்டமாக வெளியாகின.இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்ட நிலையில், தமிழ் சினிமாவின் இருபெரும் நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய ரஜினிகாந்த் “நான் இந்த படத்தில் பெரிய பழுவேட்டரையர் (வில்லன்) கதாபாத்திரத்தில் நடிக்கவா எனக் கேட்டேன். ஆனால் இயக்குனர் மணிரத்னம் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டார்.” என ஜாலியாக விழா மேடையில் பேசியிருந்தார்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேட்டும் ஏன் அந்த பாத்திரத்தில் அவரை நடிக்கவைக்கவில்லை என்று இப்போது மணிரத்னம் பதிலளித்துள்ளார். அதில் “நான் ரஜினிகாந்தின் ரசிகர்களிடம் இருந்து கண்டனங்களைப் பெற விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அடுத்த கட்டுரையில்
Show comments