Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கர்ப்பமாக இருந்ததால் விஜய்க்கு இணையாக என்னால் டான்ஸ் ஆட முடியவில்லை: பிரபல நடிகை

Advertiesment
கர்ப்பமாக இருந்ததால் விஜய்க்கு இணையாக என்னால் டான்ஸ் ஆட முடியவில்லை: பிரபல நடிகை
, திங்கள், 18 மே 2020 (09:07 IST)
கர்ப்பமாக இருந்ததால் விஜய்க்கு இணையாக என்னால் டான்ஸ் ஆட முடியவில்லை
கர்ப்பமாக இருந்ததால் தளபதி விஜய்க்கு இணையாக என்னால் டான்ஸ் ஆட முடியவில்லை என்று பிரபல நடிகை ஒருவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
விஜய் நடித்த வெற்றிப் படங்களில் ஒன்று ’குருவி’. இந்த படத்தில் 'டண்டனக்கா’ என்ற பாடல் சூப்பர்ஹிட் ஆனது என்பது தெரிந்ததே. இந்த பாடலுக்கு நடனமாட நடிகை மாளவிகா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த பாடலின் படப்பிடிப்பு நெருங்கும் நிலையில் திடீரென மாளவிகா கர்ப்பம் ஆனார். இந்த சமயத்தில் அதிக ரிஸ்க் எடுத்து டான்ஸ் ஆடக்கூடாது என டாக்டர் அறிவுறுத்தியிருந்ததால் அந்த பாடலுக்கு நடனம் ஆட முடியாது என்று இயக்குனர் தரணியிடம் தான் கூறியதாகவும், ஆனால் சிம்ப்ளான ஸ்டெப் மட்டும் வைத்து ஆடுங்கள் என்று தரணி கேட்டு கொண்டதால் அந்த பாடலுக்கு எளிமையாக நடனமாடியதாகவும் நடிகை மாளவிகா சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
 
விஜய் அந்த பாடலில் ஹிருத்திக் ரோஷன் போல வெறித்தனமாக டான்ஸ் ஆடியிருந்தார். ஆனால் அவருக்கு இணையாக என்னால் ஆட முடியவில்லையே என்று நான் ஏமாற்றம் அடைந்தேன். இருப்பினும் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியது எனக்கு ரொம்பவே சந்தோஷம் என்றும் நடிகை மாளவிகா அந்த பேட்டியில் கூறியிருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகன் செய்த செயலால் மனம் உருகிய அருண் விஜய்...!