Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னது தமிழில் பேசினாரா சன்னி லியோன்?; சரித்திர பட தலைப்பு அறிவிப்பு

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2017 (15:29 IST)
வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் சரித்திரப் படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் நடிகை சன்னி லியோன். ஆபாசப் படங்கள் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற சன்னி லியோன் தற்போது ஆபாசப் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, பாலிவுட்டில் நடித்து வருகிறார்.
தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் இந்தப் படம் தயாராக இருக்கிறது. இந்தப் படத்தின் தலைப்பு, வருகிற 27ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.
 
இந்தப் படத்துக்காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் சன்னி லியோன். இந்தப் படத்தின் மூலம் சன்னி லியோன்  மீதிருக்கும் ஆபாசப் பட நடிகை என்கிற பிம்பம் நிச்சயம் மாறும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
 
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 2018 பிப்ரவரியில் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தில் நாசர், நவ்தீப் ஆகியோர் நடிக்கின்றனர்.  சரித்திரப் படமாக உருவாகும் இப்படத்தில் சன்னி லியோன் 'வீரமாதேவி' கேரக்டரில் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்திற்கு  'வீரமாதேவி' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சன்னி லியோன் ஒரு வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார். அதில் "வணக்கம் தமிழர்களே, நான் வீரமாதேவியாக உங்களைச் சந்திக்கப் போறேன்.." என தமிழில் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அடுத்த கட்டுரையில்