Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போது அரசியலுக்கு சென்றவர் யாரும் இல்லை… விஜய்யை சப்போர்ட் பண்ணனும்- வெங்கட் பிரபு!

vinoth
வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (09:37 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் GOAT திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் தற்போது விறுவிறுப்பாக கிராபிக்ஸ் பணிகள் உட்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ரன்னிங் டைம் 3 மணிநேரம் அளவுக்கு இருக்குமென்று தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு ஆனந்த விகடன் ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் விஜய் அரசியலுக்கு செல்வது பற்றி பேசியுள்ளார்.

அதில் “சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போது யாருமே அதைவிட்டு அரசியலுக்கு சென்று நான் பார்த்ததில்லை. வயசாகி மார்க்கெட் போனபின்னர்தான் அரசியலுக்கு செல்வார்கள். ஆனால் விஜய் சாருக்கு எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். அவரை இயக்க இயக்குனர்கள் காத்திருக்கிறார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு அவர் அரசியலுக்கு செல்கிறார் என்றால் அவருக்கு மக்கள் பணி செய்ய விருப்பமிருக்கு. அவரை நாம சப்போர்ட் பண்ணனும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

மூன்று ஹீரோக்களை வைத்து அடுத்த படத்தை இயக்கும் பா ரஞ்சித்… அவரே கொடுத்த அப்டேட்!

மீண்டும் சூர்யாவுடன் இணைய வாய்ப்பிருக்கிறதா?... இயக்குனர் பாலா அளித்த பதில்!

விக்ரம் பற்றிய கேள்வி… நேர்காணலில் இயக்குனர் பாலாவின் ரியாக்‌ஷன் இதுதான்!

கையில் பாம்பை சுற்றிக்கொண்டு கார் ரைட்… அடுத்த சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்!

அடுத்த கட்டுரையில்
Show comments