Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளை கட்சி கொடி அறிமுகம் - விஜய்க்கு காங்கிரஸ் வாழ்த்து.! இந்தியா கூட்டணிக்கு பாதிப்பு இல்லை..!!

Advertiesment
Selvaperundagai

Senthil Velan

, புதன், 21 ஆகஸ்ட் 2024 (20:29 IST)
நாளை கட்சி கொடியை அறிமுகப்படுத்தும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்தார்.
 
கள்ளகுறிச்சி அருகே சின்னசேலத்தில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற  செயல்வீரர்கள் கூட்டத்தில்  செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இனிவரும் காலங்களில் இந்த தேசத்தின் குரலாக ராகுல் காந்தியின் குரல் ஒலிக்கும் என்றார்.

தமிழகத்துக்கு நிதிநிலை அறிக்கையில், ரயில்வே துறைக்கு ஆயிரம் ரூபாய் ஒதுக்கியுள்ளது என்றும் இதைக் கண்டித்து பொதுமக்களிடம் கையேந்தி ரூ.1,001-ஐ பெற்று மத்திய அரசுக்கு அனுப்ப தமிழக காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
 
சென்னை, சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு வியாழக்கிழமை நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் நடத்துகிறது என்று அவர் தெரிவித்தார்.

 
நாளை கட்சி கொடியை அறிமுகப்படுத்தும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட செல்வப்பெருந்தகை, விஜய் அரசியலுக்கு வருவதால் இந்தியா கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை, தாம்பரம் கடைகளுக்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்.. என்ன காரணம்?