Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபுசாலமனின் 'கும்கி 2' படத்தில் விஷ்ணுவிஷால்!

Webdunia
சனி, 26 மே 2018 (22:14 IST)
பிரபல இயக்குனர் பிரபுசாலமன் இயக்கிய 'கும்கி' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. ஆனால் அந்த படத்திற்கு பின்னர் அவர் இயக்கிய படங்கள் பெரிய வெற்றியை பெறாததால் மீண்டும் 'கும்கி' யானை குறித்த ஒரு படத்தை அவர் தற்போது இயக்கி வருகிறார்.
 
இந்த படம் தற்போது இந்தியில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் நாயகனாக 'பாகுபலி' புகழ் ராணா நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாகா நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்புகளும் உருவாகவுள்ளதாகவும் இந்த இரண்டு பதிப்பிலும் நாயகனாக விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை விஷ்ணுவிஷாலும் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.
 
ஆனால் இந்த படம் 'கும்கி' படத்தின் இரண்டாம் பாகமா? அல்லது புதிய கதையம்சம் கொண்ட படமா? என்பது மட்டும் இன்னும் படக்குழுவினர்களால் உறுதி செய்யப்படவில்லை. 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்திற்கு பின்னர் மீண்டும் ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டிய கட்டயத்தில் உள்ள விஷ்ணுவுக்கு இந்த படம் வெற்றிப்படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments