Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடும் கோபத்தில் இருக்கிறேன்: கொந்தளிக்கும் விஷால்..

கடும் கோபத்தில் இருக்கிறேன்: கொந்தளிக்கும் விஷால்..
, சனி, 21 ஏப்ரல் 2018 (13:42 IST)
நடிகரும், பாஜக பிரமுருமான எஸ்.வி.சேகர் நேற்று பெண் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக பதிவு ஒன்றை வெளியிட்டு சர்சையை ஏற்படுத்தினார். 

 
இந்நிலையில், இதற்கு விஷால் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, கோபத்தில் இருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 
இது குரித்து விஷால் கூறியிருப்பதாவது, இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் மீடியா துறையில் வேகமாக வளர்ந்து வருகிறார்கள். 
 
பெண்கள் முன்னேற்றத்தில் பெரியார் கண்ட கனவு நினைவாகி வரும் நேரத்தில் மீடியாவில் பணிபுரியும் சகோதரிகளை களங்கப்படுத்தும் வகையில் அவதூறு பரப்பிய எஸ்.வி.சேகரின் செயல் கடும் கண்டனத்துக்குரியது.
 
பத்திரிக்கை துறையில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர், அவர்களின் மனது இந்த அவதூறால் எவ்வளவு புண்பட்டிருக்கும் என்பதை உணர்வேன், ஒரு நடிகனாக இல்லாமல் சக நண்பனாக கடும் கோபத்துக்கு உள்ளாகி இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்ஜிகே படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் ரகுல் ப்ரீத் சிங்