Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் குற்றச்சாட்டுக்கு எதிரான முக்கியமான ஆதாரத்தை வெளியிட்ட நிவின் பாலி!

vinoth
வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (09:03 IST)
மலையாள திரையுலகில் வாய்ப்பு தேடி வரும் பெண்களை நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் பாலியல் ரீதியாகப் பயன்படுத்துவதாக (casting couch) எழுந்த சர்ச்சையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது சம்மந்தமாக ஆய்வு செய்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தற்போதைய நிலையில் மிகவும் ஆரோக்யமாக செல்லும் மாநிலமாக கேரளா இருந்த நிலையில் இந்த புகார் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மலையாள நடிகர் சங்கம் கலைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல பிரபலங்கள் மீது அடுக்கடுக்காகப் புகார்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில்தான் முன்னணி நடிகரான நிவின் பாலி, தன்னை நடிக்க வைப்பதாகக் கூறி வெளிநாட்டில் வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இதற்கு நிவின் பாலி அளித்த பதிலில் “என் மீதானக் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. அவை உண்மையில்லை என்று நிரூபிக்க நான் எந்த எல்லைக்கும் செல்வேன். இதற்குப் பின்னால் உள்ளவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவேன். மற்றவை சட்ட ரீதியாகக் கையாளப்படும்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் தரப்பில் இருந்து ஒரு முக்கியமான ஆதாரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் “பாலியல் குற்றச்சாட்டு நடந்ததாக சொல்லப்படும் தேதியில் நிவின் பாலி தன்னுடன் கொச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார்” என இயக்குனரும் நடிகருமான வினீத் சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் தங்கிய ஹோட்டல் ரசீதையும் அவர் வெளியிட்டுள்ளார். அப்போது வினீத் இயக்கிய வர்ஷங்களுக்கு சேஷம் படத்தின் ஷூட்டிங்குக்காக அவர் தங்களோடு தங்கியிருந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யார் சார் இவரு..? விபத்துக்கு பிறகும் விடாமுயற்சியோடு வந்து நின்ற அஜித் குமார்! - வாய்பிளந்த ரசிகர்கள்!

சினிமால நீடிக்கணும்னா இதை கத்துக்கோங்க அனிருத்..! அட்வைஸ் செய்த இசைப்புயல்!

சூர்யாவின் ‘ரெட்ரோ’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த சூர்யா..!

வெண்ணிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கண்ணைப் பறிக்கும் ஜான்வி கபூர்!

டால் அடிக்கும் வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்… ஸ்டன்னிங் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்