Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி படத்தில் நடிக்க மறுத்த விக்ரம்… பிரபல நடிகரிடம் சென்ற இயக்குனர் ஞானவேல்!

Webdunia
வியாழன், 1 ஜூன் 2023 (07:55 IST)
ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் மற்றும் லால் சலாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதன் பின்னர் அவர் நடிக்கும் படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த படங்களுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை, இயக்குனர் ஞானவேல் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தபடத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் கதைக்களம் பற்றி சமூகவலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதன்படி இந்த படத்தில் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக நடிப்பதாகவும், அவர் சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் என்கவுண்ட்டர்களுக்கு எதிராக போராடும் வேடத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க நடிகர் விக்ரம்மை படக்குழு அனுகுவதாகவும், இது சம்மந்தமாக விக்ரம் யோசனையில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. மேலும் வில்லன் வேடத்தில் நடிக்க விக்ரம்முக்கு இதுவரை வாங்காத சம்பளமாக 50 கோடி ரூபாய் கொடுக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகின்றன.  ஆனால் அந்த வேடத்தில் நடிக்க விக்ரம் மறுத்து விட்டதாக சொல்லபடுகிறது. இதனால் அந்த வேடத்தில் நடிக்க அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியா திரும்பிய கமல்ஹாசன்… அமரன் படத்தின் நூறாவது நாள் விழாவில் நடந்த மாற்றம்!

அஜித்தின் குட் பேட் அக்லி தள்ளிப் போக வாய்ப்பு… நெட்பிளிக்ஸ் கொடுக்கும் அழுத்தமா?

அக்கட தேசத்தில் அனிருத் இசைக்கு அதிகரிக்கும் டிமாண்ட்… சிரஞ்சீவி படத்தில் ஒப்பந்தம்!

ரசிகர்களை சித்ரவதை செய்யவா ஒருவர் படம் எடுப்பார்?... கங்குவா குறித்து போஸ் வெங்கட் கருத்து!

புஷ்பா 2 ஓடிடி ரிலீஸ்… கொந்தளித்த கன்னட ரசிகர்கள்.. நெட்பிளிக்ஸ் ஓரவஞ்சனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments