தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நடிகர் தனுஷ் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதனிடையே கடந்த ஆண்டு இவர்கள் திடீரென விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதனால் பல செய்திகள் வெளியானது. இந்நிலையில் தற்போது தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக லாங் ஹேர் தாடி வைத்துக்கொண்டு சாமியார் தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.