Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜயகாந்த் கைப்பற்றி அன்பு முத்தம்… எமோஷன் ஆன SAC

Advertiesment
விஜயகாந்த் கைப்பற்றி அன்பு முத்தம்… எமோஷன் ஆன SAC
, செவ்வாய், 31 ஜனவரி 2023 (14:51 IST)
விஜயகாந்த் மற்றும் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரன் ஆகிய இருவரும் இணைந்து 19க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் விஜயகாந்த். தனது ரசிகர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் இவர் ஏராளமான உதவிகள் செய்துள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு தேமுதிக என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய அவர் சில ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற சாதனை படைத்தார்.

சமீப நாட்களாக நடிகர் விஜயகாந்த் உடல் நடல்க்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அரசியல் முக்கிய நிகழ்வுகளில் மட்டும் பங்கெடுத்து வருகிறார். கட்சியை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் நிர்வகித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு நீரிழிவு பிரச்சனையால் கால் விரலில் இரத்த ஓட்டம் இல்லாததால் அகற்றப்பட்டது. இதனால் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில் திரைத்துறையில் விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான எஸ் ஏ சந்திரசேகரன் விஜயகாந்த் இல்லத்துக்கு சென்று அவரை நேரில் சந்தித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்களை பகிர்ந்து “என் உயிரை சந்தித்த போது” என ட்வீட் செய்துள்ளார். 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாவ்... சூப்பர் கார்ஜியஸ் லுக்கில் கலக்கும் அனுபமா பரமேஸ்வரன்!