நடிகர் விஜய்காந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் தீவிர அரசியலில் இருந்து விலகி ஓய்வு எடுத்து வருகிறார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை கடந்த சில ஆண்டுகளாக நலிவடைந்துள்ளது. இதற்காக அவர் சில முறை வெளிநாடு சென்று சிகிச்சை எடுத்து திரும்பினார். உடல்நிலை காரணமாக அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவதில் இருந்து விலகி, வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். அவருக்கு பதிலாக கட்சி சம்மந்தமான பணிகளை அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கவனித்து வருகிறார்.
இந்நிலையில் இப்போது அவர் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இளைத்து ஒல்லியாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை பகிரும் ரசிகர்கள் பலரும் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.