Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியிலும் தயாராகும் வாரிசு திரைப்படம்… தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்!

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (08:20 IST)
வாரிசு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை லலித்குமார் பெற்றுள்ளார். இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாரிசு படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை மாஸ்டர் தயாரிப்பாளர் லலித்குமார் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் வாரிசு படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் இப்போது எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அதிகமான திரைகளில் வாரிசு தெலுங்கில் ரிலீஸ் ஆகும் என்றும் தயாரிப்பாளர் தில் ராஜு கூறியுள்ளார். மேலும் தமிழ், தெலுங்கு மட்டுமில்லாமல் இந்தியிலும் அதே நாளில் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் இட்லி கடை பட ஷூட்டிங் பாதியிலேயே நிறுத்தம்… காரணம் என்ன?

கம்பேக் கொடுக்க மார்க் ஆண்டனி 2 எடுக்க விரும்பும் விஷால்.. சம்மதிப்பாரா ஆதிக்?

இனி வருடத்துக்கு இரண்டு படங்கள் வரும்… ரசிகர்களுக்கு சூர்யா நம்பிக்கை!

விடுதலை 2 படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?... வெளியான தகவல்!

போலீஸ் அனுமதிக்காத போதும் ஏன் தியேட்டர் விசிட்?... அல்லு அர்ஜுன் அளித்த விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments