Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகனை நினைத்து சோகமாகிய விஜய்: பரபரப்பு தகவல்

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (19:48 IST)
மகனை நினைத்து சோகமாகிய விஜய்:
தளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த படத்திற்கு தயாராகி வரும் நிலையில் அவரது மகன் கனடாவில் மாட்டிக்கொண்டுள்ளது தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா பரபரப்பு காரணமாக உலகம் முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து கனடாவில் படித்து வரும் விஜய்யின் மகன் சஞ்சய், இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் திண்டாடி இருப்பதாக விஜய்க்கு தகவல் கிடைத்தது
 
இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த விஜய் மகனின் நிலைமையை நினைத்து சோகமாக இருப்பதாகவும் கனடாவில் மகன் தனியாக இருப்பதை அறிந்து அவரும் அவருடைய குடும்பத்தினரும் மன வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
அமெரிக்காவில் இருப்பது போன்று கனடாவில் கொரோனா தொற்று அதிகம் இல்லை என்றாலும் சஞ்சய்  உடன் படித்தவர்கள் அனைவரும் அவரவர் வீட்டுக்கு சென்று விட்ட நிலையில் சஞ்சய் மட்டும் தனியாக இருப்பதால் விஜய் குடும்பத்தினர் பெரும் கவலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் சஞ்சய் கனடாவில் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவருக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்ற தகவல் மட்டும் விஜய் குடும்பத்தினர்களை நிம்மதி அடைய செய்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments