Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடேங்கப்பா விஜய் சேதுபதி கைவசம் இத்தன படம் இருக்கா!!

அடேங்கப்பா விஜய் சேதுபதி கைவசம் இத்தன படம் இருக்கா!!
, செவ்வாய், 30 ஜனவரி 2018 (08:31 IST)
நடிகர் விஜய் சேதுபதி கணக்காளராக தனது வாழ்க்கையை தொடங்கி, கணக்காளர் பணி பிடிக்காததால், பின்னர் நடிப்புத் துறையை தேர்ந்தெடுத்து பல்வேறு இடர்பாடுகளுக்கும் இன்னல்களுக்கும் இடையே திரைத்துறையில் நடிகராக நுழைந்தார். 
பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்த விஜய் சேதுபதி, 2010ல் வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின் அவர் நடிப்பில் வெளியான பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்புத் திறமையின் மூலம், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான தர்மதுரை, காதலும் கடந்து போகும், விக்ரம் வேதா போன்ற திரைப்படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. 
 
இந்நிலையில் அவர் தற்பொழுது ஜூங்கா, சீதகாதி, 96, சூப்பர் டீலக்ஸ், மாமனிதன், மணிரத்னம் படம் மற்றும் தெலுங்கில் ஒரு படம் உள்ளிட்ட ஏழு படங்களில் நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் திரைப்படம் வரும் வெள்ளிக் கிழமை ரிலீசாக உள்ளது. விஜய் சேதுபதியின் வெற்றியும், புகழும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதேபோல் இவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களும் லாபத்தையே ஈட்டுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நள்ளிரவில் படப்பிடிப்பு: 200 ஆண்களுக்கு மத்தியில் ஒரே ஒரு நடிகை