Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ டிரைலர் ரிலீஸ்!

Webdunia
செவ்வாய், 16 மே 2023 (08:18 IST)
தொடர்ந்து தோல்வி படங்களாக நடித்து வந்த விஜய் சேதுபதிக்கு விடுதலை வெற்றிப் படமாக அமைந்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் ஏறுமுகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர் நடிப்பில் சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடந்த ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படம் மே 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோகநாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் யாதும் ஊரே யாவரும் கேளீர். இப்படத்தில் மேகா ஆகாஷ் ரகுஆதித்யா, நடிகர் விவேக் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி இலங்கையில் இருந்து வந்து வாய்ப்புகளை தேடும் இசைக்கலைஞராக நடித்துள்ளார். இந்த படம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்தாலும் பல காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இப்போது இந்த படத்தின் டிரைலர் ரிலீஸாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'ஜவான்’ படத்திற்கு பாதிக்கு மேல் இசையமைத்தவர் சாய் அபயங்கரா? அட்லி தேர்வின் ரகசியம்..!

அமாவாசையை பிக்ஸ் செய்த வெற்றிமாறன்.. என்ன தான் புரட்சியாளராக இருந்தாலும் செண்டிமெண்ட் உண்டு..!

கூலி - ஜனநாயகன் ஓவர்சீஸ் ரைட்ஸ்.. இஷ்டத்திற்கு அடித்து விடும் யூடியூபர்கள்.. உண்மை என்ன?

அஜித்தின் அடுத்த படத்தில் மோகன்லால்.. ரஜினி, விஜய்யை அடுத்து அஜித்துடனா? மாஸ் தகவல்..!

சின்னத்திரை நடிகை மீது மான நஷ்ட வழக்கு: தொழிலதிபர் அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments