Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதி நடிப்பில் ஆறுமுக குமார் இயக்கும் படத்தின் டைட்டில் இதுதான்!

vinoth
சனி, 3 பிப்ரவரி 2024 (07:34 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற படத்தை இயக்கி தயாரித்தார் ஆறுமுக குமார். அந்த படம் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. இதையடுத்து மீண்டும் அவர் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி. பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இந்தபடம் தொடங்கப்படுவதில் தாமதம் ஆன நிலையில் கடந்த ஆண்டு மத்தியில் மலேசியாவில் வைத்து இந்த படம் தொடங்கி ஷூட்டிங் நடந்தது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி சமையல் கலை நிபுணராக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மலேசியா வாழ் சமையல் கலைஞராக இந்த படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் படக்குழு அறிவித்துள்ளது. இது சம்மந்தமாக மலேசியாவில் படக்குழுவினர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட, அது இணையத்தில் கவனம் பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் என்ன என்பது பற்றி தகவல் வெளியாகியுள்ளது. படத்துக்கு ‘சத்தியமா பொய்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வித்தியாசமான இந்த டைட்டில் ரசிகர்களைப் பெரியளவில் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் புகைப்படத் தொகுப்பு!

கிளாமரான லுக்கில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஓடிடியிலாவது கவனம் பெறுமா ஆர் ஜே பாலாஜியின் ‘சொர்க்க வாசல்’?

சோஷியல் மீடியாவில் வைரலான வார்த்தையை விடாமுயற்சி பாடலில் சொருகிய அனிருத்!

ஆர் ஆர் ஆர் உருவானது எப்படி?.. நெட்பிளிக்ஸில் வெளியான மேக்கிங் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments