தளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீஸர் இணையத்தில் கசிந்து உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
’பிகில்’ படத்தின் டீசரை தான் பார்த்ததாகவும் டீசர் வெறித்தனமாக இருப்பதாகவும், அதிகாரப்பூர்வமாக வெளியாகும் டீசருக்கு தான் வெயிட்டிங் வேண்டும் ஒரு ரசிகர் டுவிட்டரில் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்
இந்த டுவிட்டை அடுத்து இணையத்தில் தேடிய பலர் ’பிகில்’ டீசர் இணையத்தில் கசிந்துள்ளது உண்மைதான் என்றும் அதனை தாங்களும் பார்த்ததாகவும் பதிவு செய்துள்ளனர். இந்த தொடர் பதிவுகளால் திரைப்படக்குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்
கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன ’பிகில்’ டீசர் எப்படி இணையத்தில் லீக் ஆனது? என்று புரியாமல் படக்குழுவினர் செய்வதறியாக திகைத்து, அதிர்ச்சியில் உள்ளனர் மேலும் இது குறித்த விசாரணைகள் படக்குழுவினர் உத்தரவிட்டது
ஏற்கனவே ’பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே’ மற்றும் வெறித்தனம் ஆகிய பாடல்கள் அதிகாரபூர்வமாக வெளியாவதற்கு முன்னரே இணையத்தில் லீக் ஆனது என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் ’பிகில்’ படத்தின் டீசரும் லீக் ஆகி வைரலாகி கொண்டிருப்பதால் அதிகாரபூர்வ டீசரை உடனடியாக வெளியிட்டு விடலாம் என படக்குழுவினர் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது