ரி ரிலீஸில் 100 நாட்கள் திட்டம்… கில்லி மேடையில் கலந்துகொள்ள போகும் விஜய்?

vinoth
புதன், 8 மே 2024 (07:30 IST)
தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன ஒக்கடு திரைப்படம் தமிழில் கில்லி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அதற்கு முக்கியக் காரணம் படத்தை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு மாற்றியிருந்தார் இயக்குனர் தரணி. 2004 ஆம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூலை செய்த படமாக கில்லி அமைந்தது. இந்த படத்தின் மூலம்தான் முதலாக த்ரிஷா விஜய் வெற்றிக் கூட்டணி அமைந்தது.

இந்த நிலையில் இந்த படம் வெளியாகிய 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த படத்தை ஏப்ரல் 20 ஆம் தேதி சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் ரி ரிலீஸ் செய்துள்ளது. படம் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட திரைகளில் ரி ரிலீஸ் செய்யப்பட்டு இதுவரை 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கில்லி திரைப்படத்தை நூறு நாட்கள் வரை திரையிட சென்னையின் பிரபல திரையரங்கு ஒன்று முடிவு செய்துள்ளதாகவும், 100 ஆவது நாள் விழாவில் விஜய்யை அழைத்து கௌரவிக்க உள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments