Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் பட நடிகருக்கு காவல்துறையில் பதவி உயர்வு

Advertiesment
நடிகர் ஐஎம் விஜயன்
, திங்கள், 22 பிப்ரவரி 2021 (15:42 IST)
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகிப் பெரும் வெற்றிப் பெற்ற படம் பிகில். இப்படத்தை இயக்குநர் அட்லி இயக்கினர் .இப்படத்தில் நடிகர் விஜய் இரண்டு வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். இப்படம்  வசூல் சாதனை புரிந்ததுடன், விஜய்யின் நடிப்புக்கு பாராட்டுக் கிடைத்தது…

இந்நிலையில் பிகில் படத்தில்  வில்லனாக நடித்த நடிகர் ஐ.எம். விஜயனுக்கு காவல்துறை உயரிய விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.

நடிகர் ஐஎம்.விஜயன் முன்னாள் இந்திய கால்பந்து விளையாட்டு வீரர் ஆவர்.இவர் கால்பந்து விளையாட்டில் ஓய்வுபெற்ற பின், கேரள மாநிலக் காவல்துறையில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.
webdunia

இவர் சினிமாக்களிலும் நடித்து வரும் நிலையில் நடிகர் விஜய்யுடன் பிகில், கொம்பன், திமிரு உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களின் கவனத்தைப் பெற்றவர்.

இந்நிலையில், நடிகர் மற்றும் காவல்துறை அதிகாரி ஐ.எம் விஜயனுக்கு இன்று கேரள காவல்துறை உயர்பதவி வழங்கிக் கவுரவித்துள்ளது. இதுகுறித்து ஐஎம். விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவர்ச்சி தேவதைடா... சாக்ஷியின் கிளாமரில் மொத்தமா விழுந்த நெட்டிசன்ஸ்!