Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் பட நடிகர் 2 வது திருமணம்....முதல் மனைவி உருக்கமான பதிவு

Webdunia
வெள்ளி, 26 மே 2023 (12:42 IST)
பிரபல நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி, ரூபாலி பருவா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இதற்கு  அவரது முதல் மனைவி உருக்கமான பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் பிரபல நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர், இந்தி, தமிழ் உள்ளிட்ட 11 மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் விஜய் உடன் இணைந்து, கில்லி, விக்ரமுடன் இணைந்து கந்தசாமி, ரஜினியுடன் பாபா, தனுஷுடன் மாப்பிள்ளை, உத்தம வில்லன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

இவர், பழம்பெரும் நடிகை சகுந்தலா பருவாவின் மகளும் பாடகரும்,  நடன கலைஞருமான ராஜோஷி பருவாவை திருமணம் செய்திருந்தார்.

இந்த நிலையில், ஆதிஷ் வித்யார்த்தி (60 வயது)  தற்போது, அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த ரூபாலி பருவா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

இதற்கு அவரது முதல் மனைவி தன் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில்,''வாழ்க்கையில் சரியான   நபர், அவர்களுக்கு நீங்கள் எவ்வளவு தேவை என்று அவர்கள் உங்களிடம் கேட்ட மாட்டார்கள்.  ஒன்றை  நினைவில் வைத்துக்   கொள்ளுங்கள்….உங்களுக்கு தீங்கு ஏற்படும் என்று தெரிந்த விஷயங்களை செய்ய வேண்டாம்.

குழப்பங்கள் நீங்கி உங்கள் வாழ்க்கை அமைதியால் நிரம்பட்டும்.  நீங்கள் ஆசீர்வாதங்கள் பெறும்  நேரமிது. நீங்கள் அதற்குத் தகுதியானவர்'' என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், ஆஷிஷ் வித்யார்த்தியின்  இரண்டாவது திருமணத்தில் அவருக்கு விருப்பமில்லை என்று இந்த உருக்கமான பதிவில் தெரிகிறது. ரசிகர்களும் அவரது திருமணத்தை விமர்சித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்றாவது ஒருநாள் தேசிய விருதை வாங்குவேன்… அம்மா கொடுத்த புடவையோடு வருவேன் – சாய் பல்லவி நம்பிக்கை!

தனுஷுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் அர்ஜுன்… எந்த படத்தில் தெரியுமா?

ரஜினிக்கும் வில்லன் ஆகிறாரா எஸ் ஜே சூர்யா?... திரை தீ பிடிக்கப் போகுது!

ரெட்ரோ படத்தில் பூஜா ஹெக்டேவின் கதாபாத்திரம் இதுவா?.. Decode செய்த ரசிகர்கள்!

கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ விஜய் சேதுபதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments