Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

234 தொகுதிகளிலும் மதிய உணவு.. ரசிகர்களுக்கு தளபதி விஜய் கட்டளை..!

Advertiesment
234 தொகுதிகளிலும் மதிய உணவு.. ரசிகர்களுக்கு தளபதி விஜய் கட்டளை..!
, வியாழன், 25 மே 2023 (18:42 IST)
மே 28ஆம் தேதி உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுவதை அடுத்து அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் மதிய உணவு அளிக்க ரசிகர்களுக்கு விஜய் கட்டளையிட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
 
உலகம் முழுவதும் மே 28-ஆம் தேதி "உலக பட்டினி தினம்" அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் நீண்டகால பட்டினியால் வாடும் மக்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.
 
"தளபதி" அவர்களின் சொல்லுக்கினங்க, உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு பசி எனும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "தளபதி விஜய் மக்கள் இயக்கம்" சார்பாக "தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்" திட்டம் மூலம் வருகின்ற 28.05.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பகல் 11 மணியளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை (மதிய) உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
மேலும் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள "தளபதி விஜய் மக்கள் இயக்கம்" சார்பாக "பட்டினி தினத்தை" முன்னிட்டு ஒரு நாள் (மதிய) உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டடுள்ளது.
 
இதன் மூலம் பசியால் வாடும் மக்களுக்கு இயன்றவரை உணவளித்து பசியினை போக்கும் விழிப்புணர்வினை சமுதாயத்தில் ஏற்படுத்தும் நோக்கத்துடன் "தளபதி விஜய் மக்கள் இயக்கம்" இந்த நலப்பணி செய்யப்படுகிறது.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’மாமன்னன்’’ பட புதிய அப்டேட் வெளியிட்ட படக்குழு